மேலும்

பிரிவு: செய்திகள்

‘றோ’ அதிகாரியின் இடமாற்றம் வழக்கமானது – என்கிறது இந்தியா

கொழும்பில் இருந்து ‘றோ’ அதிகாரி திருப்பி அழைக்கப்படவில்லை என்றும் அது வழக்கமான இடமாற்றமே என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் இருந்து இராணுவம் வெளியேறாது – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன்

புதிய அரசாங்கம் வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றாது என்றும், தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கும் என்றும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

மகிந்த பதுக்கி வைத்திருந்த 3000 துப்பாக்கிகள், லம்போகினி கார், 68,000 மணிக்கூடுகள் மீட்பு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரால் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த லம்போகினி ரக பந்தயக் கார், 68 ஆயிரம் சுவர் மணிக்கூடுகள் உள்ளிட்ட பொருட்களை சிறிலங்கா காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

புதுடெல்லியில் மங்கள – சுஸ்மா சந்திப்பு

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கும் இடையில் இன்று மதியம் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

மகிந்தவைத் தோற்கடிப்பதில் முக்கிய பங்காற்றிய றோ அதிகாரி – பரபரப்புத் தகவல்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்பதில் இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘றோ’ வின் கொழும்பு பணியகத் தலைமை அதிகாரியான இளங்கோ முக்கிய பங்காற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல் விளம்பரங்களுக்காக 2 பில்லியன் ரூபா அரச பணத்தை ஏப்பம் விட்டார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தனது தேர்தல் பரப்புரை விளம்பரங்களுக்காக, 2 பில்லியன் ரூபா அரசாங்கப் பயணத்தைச் செலவிட்டுள்ளதாக, நிதியமைச்சு அதிகாரிகளை ஆதாரம்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணைக்கு சிறிலங்கா ஒத்துழைக்கும் – பிரதமர் ரணில் தெரிவிப்பு

போர்க்குற்றங்கள் குறித்த ஐ.நா நடத்தும் விசாரணைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு அளிக்கும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கு ஆளுனர் மாற்றத்தை சம்பந்தன் வரவேற்பு – கிழக்கிலும் நடக்கும் என நம்பிக்கை

வடக்கு மாகாணத்தில் இராணுவ பின்புலம் கொண்ட ஆளுனருக்குப் பதிலாக, மூத்த சிவில் அதிகாரியான பாலிஹக்காரவை நியமிக்க புதிய அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வரவேற்றுள்ளார்.

ஜெனிவா விவகாரம்: இந்தியாவிடம் உதவி கோருவார் மங்கள சமரவீர

சிறிலங்காவின் புதிய  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டு நேற்று மாலை  சுமார் 6 மணியளவில் புதுடெல்லியைச் சென்றடைந்தார்.

ஆளுனர் பாலிஹக்காரவின் நியமனம் – கூட்டமைப்பு பிரமுகர்கள் வரவேற்பு

வடக்கு மாகாண ஆளுனராக முன்னாள் இராஜதந்திரயான எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார நியமிக்கப்பட்டுள்ளது குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.