மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

குற்றவாளிகள் வீரர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் – முதலமைச்சர்

குற்றவாளிகள் வீரர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கை – சிறிலங்காவில் வதிவிட சட்ட ஆலோசகரை நியமிக்கிறது அமெரிக்கா

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும், சொத்துக்களை மீட்பதற்கான பயிற்சிகளை அளிப்பதற்கும், இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு உதவவும், சிறிலங்காவுக்கு வதிவிட சட்ட ஆலோசகர் ஒருவரை அமெரிக்கா வழங்கவுள்ளது.

கோத்தா கைதுக்கு இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்வதற்கு விதித்திருந்த இடைக்காலத் தடை உத்தரவை மேல்முறையீட்டு நீதிமன்றம் டிசெம்பர் 15ஆம் நாள் வரை நீடித்துள்ளது.

நெஸ்பி பிரபுவின் அறிக்கை பிரித்தானிய அரசின் நிலைப்பாடு அல்ல – தூதரகம் அறிக்கை

சிறிலங்காவின் பொறுப்புக்கூறல் விவகாரங்கள் தொடர்பாக பிரித்தானிய பிரபுக்கள் சபையில், நெஸ்பி பிரபு வெளியிட்ட அறிக்கை, பிரித்தானியாவின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை என்று கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

248 உள்ளூராட்சி சபைகளுக்கு வரும் 18 ஆம் நாள் வேட்புமனுத்தாக்கல் ஆரம்பம்

248 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பு நேற்று மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது.

4000 மில்லியன் ரூபாவை விழுங்கும் உள்ளூராட்சித் தேர்தல்

ஒரே நாளில் நடத்த எதிர்பார்த்துள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களுக்கு சுமார் 4000 மில்லியன் ரூபா செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் கையளிப்பதற்கு சிறப்பு அமைச்சரவைக் கூட்டம்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திடம் கையளிப்பது தொடர்பான அரசிதழை அறிவிப்பை அங்கீகரிப்பதற்காக நாளை மறுநாள் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதுடன், நாடாளுமன்றத்திலும் அதற்கு அங்கீகாரம் அளிக்கப்படவுள்ளது.

ஓய்வுபெற்ற பின்னர் அரசியலில் ஈடுபடக் கூடாது – சிறிலங்கா இராணுவத் தளபதி

இராணுவ அதிகாரிகள் ஓய்வு பெற்ற பின்னர் எந்தச் சூழ்நிலையிலும் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 17இற்கு முன் உள்ளூராட்சித் தேர்தல் – மகிந்த தேசப்பிரிய

உள்ளூராட்சித் தேர்தல்கள் வரும் பெப்ரவரி 17ஆம் நாள் அல்லது அதற்கு முன்னதாக நடத்தப்படும் என்று சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மத வழிபாட்டு இடங்களை தேர்தல் பரப்புரைகளுக்குப் பயன்படுத்தத் தடை

எந்தவொரு தேர்தல் பரப்புரைக்கும் மத வழிபாட்டு இடங்களைப் பயன்படுத்துவதை தேர்தல் ஆணைக்குழு தடை செய்திருப்பதாக, சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய    தெரிவித்துள்ளார்.