மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

உள்ளூராட்சித் தேர்தலினால் பொறுப்புக்கூறலுக்குப் பின்னடைவு

கூட்டு எதிரணி வலுவான நிலையில் இருப்பதாலும், உள்ளூராட்சித் தேர்தலினாலுமே, காணாமல்போனோர் பணியகத்தை செயற்படுத்துதல் உள்ளிட்ட பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் இழுபறிப்படுவதாக தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் கலாநிதி ஜெகான் பெரேரா தெரிவித்துள்ளார்.

20 கட்சிகளுடன் மகிந்த தலைமையில் கூட்டு பொதுஜன முன்னணி உருவாக்கம்

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக மகிந்த ராஜபக்சவின் தலைமையில் கூட்டு பொதுஜன முன்னணி என்ற பெயரில், புதிய கூட்டணி ஒன்றை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல்

எல்லை நிர்ணயம் தொடர்பான அரசிதழுக்கு எதிரான மனுக்கள் மீளப் பெறப்பட்டதை அடுத்து, அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்த சிறிலங்காவின் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

கிறுக்கப்பட்ட நாணயத் தாள்கள் செல்லுபடியாகாது – சிறிலங்கா மத்திய வங்கி அறிவிப்பு

எழுதுகருவிகளினால் கிறுக்கப்பட்ட, வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்ட, மாற்றம் செய்யப்பட்ட, அல்லது உருச்சிதைக்கப்பட்ட நாணயத்தாள்கள், வரும் டிசெம்பர் 31ஆம் நாளுக்குப் பின்னர் செல்லுபடியாகாது என்று சிறிலங்கா மத்திய வங்கி அறிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபருக்கு சியோல் பெருநகரத்தின் கௌரவ குடியுரிமை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, தென்கொரியாவின், சியோல் பெருநகர அரசாங்கம், கௌரவ குடியுரிமை வழங்கி கௌரவித்துள்ளது.

ஜெனிவா தீர்மானத்தை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – பிரித்தானியா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

அடுத்தவாரம் கொழும்பு வருகிறது ஐ.நா பணிக்குழு

தன்னிச்சையான தடுத்து வைப்புகள் தொடர்பான, ஐ.நா பணிக்குழு அடுத்தவாரம் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்தக் குழுவின் மூன்று உறுப்பினர்கள், சிறிலங்காவில் எதிர்வரும் டிசெம்பர் 4ஆம் நாள் தொடக்கம் 15ஆம் நாள் வரை தங்கியிருந்து மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளனர்.

தென்கொரிய அதிபரை எதிர்பாராமல் சந்தித்த சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், தென்கொரிய அதிபர் மூன் ஜா-இன்னும் நேற்று எதிர்பாராத வகையில் திடீரெனச் சந்தித்தனர்.

ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பூட்டு – மைத்திரியை விமர்சிப்பதற்குத் தடை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை விமர்சிப்பதைத் தவிர்க்குமாறு ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென்கொரியா சென்றடைந்தார் சிறிலங்கா அதிபர்

மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இன்று காலை தென்கொரியாவைச் சென்றடைந்தார்.