இரண்டு நிமிடங்களில் கலைந்த அரசியலமைப்பு பேரவை
புதிய அரசியலமைப்பு தொடர்பாக வழிநடத்தல் குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை குறித்த அரசியலமைப்பு பேரவையின் இறுதி நாள் விவாதம், உரையாற்றுவதற்கு உறுப்பினர்கள் இல்லாததால் இரண்டு நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
புதிய அரசியலமைப்பு தொடர்பாக வழிநடத்தல் குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை குறித்த அரசியலமைப்பு பேரவையின் இறுதி நாள் விவாதம், உரையாற்றுவதற்கு உறுப்பினர்கள் இல்லாததால் இரண்டு நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வரும் உள்ளூராட்சித் தேர்தலில் பசீர் சேகுதாவூத் தலைமையிலான ஐக்கிய சமாதானக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில், உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களை நிறுத்துவதற்கான ஆசனப்பங்கீடுகள் நிறைவுபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் அரசுக் கட்சி மாவட்ட ரீதியில் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களின் விபரங்களை, மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தல் ஆசனப்பங்கீடு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் காணப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் குத்தகை உரிமையை சீன- சிறிலங்கா கூட்டு முயற்சி நிறுவனங்களுக்கு மாற்றும் வகையில் வெளியிடப்பட்ட இரண்டு அரசிதழ் அறிவிப்புகளுக்கு சிறிலங்கா நாடாளுமன்றம் நேற்று அங்கீகாரம் அளித்துள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டு எதிரணி இணைந்து போட்டியிடுவதற்கு வாய்ப்பு இல்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகளை அரசியல் கூட்டமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தீவிரப்படுத்தியுள்ளன.
வடக்கு- கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வரும், ஈபிஆர்எல்எவ் பத்மநாபா அணியின் முக்கிய தலைவருமான அண்ணாமலை வரதராஜப்பெருமாளுக்கு மீண்டும் சிறிலங்கா குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாக, சீன அரசு நிறுவனத்துடன், பங்கு உரிமையைப் பகிர்ந்து கொள்வதற்கான உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.