மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

சிறிலங்கா, தமிழ்நாட்டுக்கு வெள்ள ஆபத்து – வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம்

தெற்கு வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக, சிறிலங்காவிலும் தென்னிந்தியாவிலும் வெள்ள ஆபத்து ஏற்படலாம் என்று காலநிலை தொடர்பான இணையத்தளம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐ.நா குழுவுடனான சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க தடை

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவுடன் பேசப்பட்ட விடயங்கள் குறித்து, ஊடகங்களிடம் கருத்து வெளியிட வேண்டாம் என்று, காணாமற்போகச் செய்யப்பட்டோரின் உறவினர்களிடம் ஐ.நா கேட்டுக் கொண்டுள்ளது.

அரசியல் கைதிகள் விடுதலைக்கான போராட்டங்களை ஒருங்கிணைக்கத் தவறியது கூட்டமைப்பு

சிறைச்சாலைகளில் உண்ணாவிரதப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்துள்ள அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும், வடக்கு கிழக்குத் தழுவிய போராட்டத்தை நடத்தும் விடயத்தில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் ஒன்றுபடத் தவறியுள்ளன.

மாலைதீவில் கைது செய்யப்பட்டவர் கருவாட்டு வியாபாரி?

மாலைதீவு அதிபரைக் கொலை செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர், கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஒரு கருவாட்டு வியாபாரி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாதுளுவாவே சோபித தேரர் இன்று அதிகாலை காலமானார்

சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், கோட்டே சிறி நாகவிகாரையின் விகாராதிபதியுமான, வண.மாதுளுவாவே சோபித தேரர் (வயது73) இன்று அதிகாலையில் காலமானார்.

ஆபத்தான நிலையில் மாதுளுவாவே சோபித தேரர்

சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவரும் சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவரும், கோட்டே நாக விகாரையின் விகாராதிபதியுமான, வண.மாதுளுவாவே சோபித தேரர் ஆபத்தான நிலையில் இருப்பதாக சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

மிதக்கும் ஆயுதக் களஞ்சிய விவகாரம் – சிறிலங்கா அமைச்சரவைக்குள் பிளவு, கடும் வாக்குவாதம்

அவன்ட் கார்ட் நிறுவனத்தின் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பனவும், நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவும் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்கள், சிறிலங்கா அரசாங்கத்துக்குள் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

மாலைதீவில் சினைப்பர் அணி சிப்பாய் கைது – மூடி மறைக்கும் சிறிலங்கா

சிறிலங்கா இராணுவத்தின் சினைப்பர் தாக்குதல் அணியைச் சேர்ந்த முன்னாள் சிப்பாய் ஒருவர், மாலைதீவில் கைது செய்யப்பட்டது தொடர்பான, தெளிவான தகவல்களை வெளியிட, சிறிலங்கா அரசாங்க, மற்றும் இராணுவத் தரப்பு மறுத்துள்ளது.

சிறிலங்கா இராணுவத்தின் சினைப்பர் அணியின் முன்னாள் சிப்பாய் மாலைதீவில் கைது

சிறிலங்கா இராணுவத்தில் சினைப்பர் தாக்குதல் அணியில் இருந்த, முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் மாலைதீவில் கைது செய்யப்பட்டுள்ளார். மாலைதீவில் உள்ள ஹிபிஹாட்டூ தீவில் பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியக் கடற்படையுடனான கூட்டுப் பயிற்சி – போர்க்கப்பலில் இருந்து பார்வையிட்ட பாதுகாப்புச்செயலர்

திருகோணமலையில் இந்திய – சிறிலங்கா கடற்படைகள் நடத்திய கூட்டுப் போர்ப் பயிற்சி நிறைவு நிகழ்வை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் மற்றும் முப்படைகளின் தளபதிகள், போர்க்கப்பலில் இருந்து பார்வையிட்டனர்.