மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

சிறிலங்கா இராணுவத்தின் ஓமந்தை சோதனைச்சாவடி நீக்கம் – ஜெனிவாவுக்கு முன்னோட்டம்

சுமார் இரண்டு பத்தாண்டுகளுக்கு மேலாக ஓமந்தையில் இயங்கி வந்த சிறிலங்கா இராணுவச் சோதனைச்சாவடியில் இன்று முதல் சோதனையிடும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

சனல்- 4 போர்க்குற்ற காணொளியின் உண்மைத்தன்மையை ஒப்புக்கொள்ளப் போகிறது சிறிலங்கா?

சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட போர்க்குற்ற ஆவணப்படம் தொடர்பாக சிறிலங்கா இராணுவம் இன்னமும் விசாரணை நடத்தி வருவதாக சிறிலங்கா இராணுவ ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா கடற்படைக்கு போர்க்கப்பலை அன்பளிப்பாக வழங்கியது இந்தியா

இந்தியக் கடலோரக் காவற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்றை, சிறிலங்கா கடற்படைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது இந்தியா. இது தொடர்பான நிகழ்வு நேற்று கொழும்புத் துறைமுகத்தில் இடம்பெற்றது.

விசாரணை அறிக்கையுடன் சிறிலங்கா வருகிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரகீத் கடத்தலில் இராணுவத்தின் தொடர்பு – பதிலளிக்க மறுத்தார் சிறிலங்கா இராணுவத் தளபதி

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பாக சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாடடுகள் தொடர்பாக கருத்து வெளியிட மறுத்துள்ளார் சிறிலங்கா இராணுவத் தளபதி.

கூட்டமைப்புடன் ஒன்றரை மணிநேரம் பேச்சு நடத்தினார் நிஷா பிஸ்வால்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இன்று காலை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

காலை வாரியது அமெரிக்கா – ஜெனிவாவில் சிறிலங்காவைக் காப்பாற்றப் போவதாக அறிவிப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வில், போர்க்குற்றங்கள் குறித்த அறிக்கை முன்வைக்கப்பட்டாலும், சிறிலங்காவுக்குப் போதிய காலஅவகாசம் வழங்க கோரும், சிறிலங்காவுக்கு ஆதரவான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா முன்வைக்கவுள்ளது.

சிறிலங்கா அரசின் முயற்சிகள் அனைத்துலக சமூகத்துக்குத் திருப்தி – மைத்திரியிடம் நிஷா பிஸ்வால்

சிறிலங்காவுக்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.

சிறிலங்காவுக்கு மீண்டும் ஆதரவை உறுதிப்படுத்தியது அமெரிக்கா

நல்லிணக்கம், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்த சிறிலங்காவுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும் என்று, தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

பிரகீத் கடத்தல்: 2 லெப்.கேணல்களை கைதுசெய்ய சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் கடும் எதிர்ப்பு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, இரண்டு லெப்.கேணல் தர அதிகாரிகள் கைது செய்யப்பட்டதற்கு சிறிலங்கா பாதுகாப்புச் செயலரும், இராணுவத் தளபதியும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.