மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

சிறிலங்காவில் ஆட்சிமாற்றத்துக்கு பிரித்தானியா ஆதரவு – இரகசிய ஆய்வையடுத்து முடிவு

சிறிலங்காவில் ஆட்சிமாற்ற ஏற்படுவதற்கு பிரித்தானியாவின் ஆளும் கொன்சர்வேட்டிவ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“தோல்வியுற்றால் ஆட்சியை ஒப்படைத்து விடுவேன்” – ஆயர்களுக்கு மகிந்த வாக்குறுதி

அதிபர் தேர்தலில் தாம் தோல்வியுற்றால், எந்த தயக்கமும் இன்றி அதிகாரத்தை ஒப்படைத்து விடுவேன் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கத்தோலிக்கத் திருச்சபைக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.

புலியின் குகையாக இருந்த யாழ்ப்பாணம் இப்போது குற்றத்தின் மையம்?

போர் முடிவுக்கு வந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்திருப்பது குறித்து நிபுணர்கள் கவலையடைந்துள்ளனர். சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்று அறியப்பட்ட இடம், இன்று குற்றவாளிகளும், சட்டத்தை மீறுவோரும் மகிழ்ச்சியாக வேட்டையாடும் இடமாக மாறியுள்ளது.

மகிந்தவை ஆதரிக்கும் அதிகாரிகள் மீது வெளிநாட்டு பயணத்தடை – எதிரணியின் கிடுக்கிப்பிடி

தேர்தல் விதிமுறைகளை மீறி, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாகச் செயற்படும் அரசாங்க மற்றும் இராணுவ, காவல்துறை அதிகாரிகள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இழந்தது மகிந்த அரசு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக இருந்து வந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நேற்றுடன் இழந்துள்ளது.

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு இல்லை – கையை விரிக்கிறார் மைத்திரி

தனது தேர்தல் அறிக்கையில் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு யோசனைகள் எதுவும் உள்ளடக்கப்படமாட்டாது என்று, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் எச்சரிக்கை

சிறிலங்காவில் தேர்தல் பரப்புரைக் காலத்தில், அமெரிக்க குடிமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கம் எச்சரிக்கை குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மோடியின் பாணியில் மைத்திரி – கண்டி கூட்டத்தில் பரபரப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, அதிகாரபூர்வமாக நேற்று கண்டியில் தனது தேர்தல் பரப்புரையை ஆரம்பித்துள்ளார்.

போர்க்குற்றம் சுமத்தப்பட்ட ஜெனரல் அவசரமாக கொழும்பு திரும்பினார்

தென்னாபிரிக்காவில் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட போதிலும், சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சிறிலால் வீரசூரிய கைது செய்யப்படுவதில் இருந்து தப்பி, கொழும்பு திரும்பியுள்ளார்.

மகிந்த, மைத்திரி குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்கள் குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகிழ்ச்சி கொள்ளவில்லை என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.