மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியவர்களைத் தாக்கும் திடீர் சுகவீனம் – சிங்கப்பூர் மருத்துவமனையில் ராஜித

சிறிலங்காவின் சுகாதார அமைச்சரான ராஜித சேனாரத்னவுக்கு நேற்று திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக சி்ங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அமெரிக்க கடற்படைகளின் மத்திய கட்டளைப் பணியகத் தளபதியுடன் சிறிலங்கா தூதுவர் சந்திப்பு

அமெரிக்க கடற்படைகளின் மத்திய கட்டளைப் பணியகத்தின் தளபதி வைஸ் அட்மிரல் கெவின் டொனேகனுடன், பாஹ்ரெயினில் உள்ள சிறிலங்கா தூதுவர் கலாநிதி சாஜ் மென்டிஸ் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சரத் பொன்சேகாவின் நியமனத்துக்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் மனு

தேசியப் பட்டியல் ஊடாக, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக, சிறிலங்கா உயர்நீதிமன்றத்தில், அடிப்படை உரிமைமீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முக்கியமான முறைப்பாடுகளுக்கே முன்னுரிமை கொடுக்கப் போகிறதாம் பரணகம ஆணைக்குழு

முக்கியமான முறைப்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து, விசாரணைகளைத் துரிதப்படுத்தி இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளதாக காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பலாலி விமான நிலையத்தை விரிவாக்கும் இந்தியாவின் திட்டத்துக்கு விக்னேஸ்வரன் எதிர்ப்பு

இந்தியாவின் நிதியுதவியுடன் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள பலாலி விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

இந்தியாவைத் திருப்திப்படுத்த கடுமையான விலையைக் கொடுக்க நேரிடும் – எச்சரிக்கிறார் பசில்

இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்காக, சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் மிகக் கடுமையான விலையைக் கொடுக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடற்படையில் இருந்து நீக்கப்படுவார் யோசித – கப்டன் அலவி

சி.எஸ்.என் தொலைக்காட்சி நிதிமோசடிக் குற்றச்சாட்டில் லெப்.யோசித ராஜபக்ச குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால், அவர் கடற்படையில் இருந்து நீக்கப்படுவார் என்று சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

இந்தியாவை பகைத்துக் கொண்டதே மகிந்தவின் தோல்விக்குக் காரணம் – என்கிறார் கோத்தா

மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு இந்தியாவைத் திருப்திப்படுத்தக் கூடிய வெளிவிவகாரக் கொள்கையைக் கடைப்பிடிக்காமையும் ஒரு காரணம் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

பதவிக்காலம் முடிந்தது – கேள்விக்குறியாகியுள்ள பரணகம ஆணைக்குழுவின் எதிர்காலம்

காணாமற்போனோர் குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட அதிபர் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்துள்ள நிலையில் அதன் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

அழுத்தங்களால் அலறுகிறார் மகிந்த – மின்சார நாற்காலிக்கு அனுப்புவது மேலானதாம்

சிறிலங்கா அரசாங்கம் தன்மீது தொடர் அழுத்தங்களைக் கொடுப்பதற்குப் பதிலாக, மின்சார நாற்காலிக்கு அனுப்புவதே மேல் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.