மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

பயணிகள் கப்பல் சேவைக்கு அவசரம் காட்டியது இந்தியா – ஆப்பு வைத்தது சிறிலங்கா

இராமேஸ்வரம் – தலைமன்னார் பயணிகள் கப்பல் சேவையை அடுத்தவாரமே ஆரம்பிக்க வேண்டும் என்று இந்தியா விடுத்த கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

ரணில், மங்களவை அவசரமாக சந்தித்த சீன தூதுவர் – உடன்பாடுகளை மதிக்குமாறு அறிவுறுத்தல்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதையடுத்து, சீனத் தூதுவர் யி ஜியான்லியாங், அவசரமாக சிறிலங்கா பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

முதல்வர் விக்னேஸ்வரன் மீது ரணில் சீற்றம்

சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களை இனப்படுகொலை செய்ததாக, வடக்கு மாகாணசபை அண்மையில் நிறைவேற்றிய தீர்மானம் குறித்து, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

வடபகுதி மீனவர்களின் பிரச்சினை குறித்து சுஸ்மாவுடன் பேசவுள்ளது கூட்டமைப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுடனான பேச்சுக்களின் போது, வடபகுதியில் உள்ள மீனவர்களின் பிரச்சினை குறித்து கலந்துரையாடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மகிந்தவின் பாதுகாப்பு அணியில் இருந்து நீக்கப்பட்டார் மகன் யோசித

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அணியில் இருந்து, அவரது மகனான லெப்.யோசித ராஜபக்ச நீக்கப்பட்டு, சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிக்கலில் சிக்கியுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவின் ‘பீல்ட் மார்ஷல்’ பட்டம்

ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான  ஜெனரல் சரத் பொன்சேகா தன்னை மீண்டும் இராணுவ சேவைக்குள் ஈர்க்க வேண்டும் என்று விடுத்துள்ள கோரிக்கையால், பீல்ட் மார்ஷலாக அவருக்குப் பதவிஉயர்வு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஆங்கில இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொழும்புத் துறைமுக நகர கட்டுமானத்தை நிறுத்துமாறு சீனாவுக்கு சிறிலங்கா எச்சரிக்கை

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்தா விட்டால், சீன நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்காவின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் ஹாசிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் மோடி

சிறிலங்காவுக்கு அடுத்தவாரம் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.

ஐ.நா உயர் பிரதிநிதி ரணிலுடன் சந்திப்பு – விசாரணையை விரைவுபடுத்துமாறு வலியுறுத்தினார்

சிறிலங்காவுக்கு நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டிருந்த ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

தமிழர்களை திருப்திப்படுத்தும் போர்க்குற்ற விசாரணையே அவசியம் – ஐ.நா உயர் பிரதிநிதி

அனைத்துலகத் தரம்வாய்ந்த உள்நாட்டு விசாரணையை சிறிலங்கா அரசாங்க துரிதமாக நடத்த வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார்.