மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

பீல்ட் மார்ஷலாக பதவிஉயர்த்தப்பட்டார் ஜெனரல் சரத் பொன்சேகா

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, வரும் 22ம் நாள் நடைமுறைக்கு வரும் வகையில், பீல்ட் மார்ஷலாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரே “13” குறித்து கவனிக்கப்படும் – என்கிறார் சிறிலங்கா அதிபர்

அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டம் தொடர்பான விவகாரம், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரே கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

துறைமுக நகர கட்டுமானப் பணியைத் தொடர சீனாவுக்கு அனுமதி

கடல் அரிப்பினால் ஏற்படும் சேதங்களைத் தவிர்ப்பதற்காக, இடைநிறுத்தப்பட்ட கொழும்புத் துறைமுக நகரத் திட்ட கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள, சிறிலங்கா அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக, துறைமுகங்கள், விமானசேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சீன முதலீட்டாளர் நலன்களை சிறிலங்கா பாதுகாக்க வேண்டும்- வலியுறுத்துகிறது சீனா

சீன முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாக்குமாறும், இருதரப்பு பொருளாதார உறவுகளை ஊக்குவிக்குமாறும், சிறிலங்காவிடம், சீனா இன்று மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளது.

சீனாவுக்கு உரிமையாகப் போகும் சிறிலங்கா வான்பரப்பு – சிக்காகோ பிரகடனத்தால் சிக்கல்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தை தொடர அனுமதிக்கப்பட்டால், சிறிலங்கா தனது வான் பிராந்தியத்தின் ஒரு பகுதியை சீனாவிடம் இழக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

13வது திருத்தம் குறித்த மோடியின் கோரிக்கை – சிறிலங்கா அரசியல் மட்டத்தில் குழப்பமான கருத்துகள்

சிறிலங்காவில் பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும், அதற்கு அப்பால் அதிகாரங்களைப் பகிர்ந்து தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறும்,விடுத்த வேண்டுகோள் குறித்து, அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நரேந்திர மோடிக்காக மீறப்பட்ட சிறிலங்காவின் இராஜதந்திர மரபுகள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறிலங்கா பயணத்தின் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், இராஜதந்திர மரபுகளை மீறிச் செயற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அனைத்துலக விசாரணைக்கு எதிராக சிறிலங்கா முழுவதும் ஒன்றுபட்டு நிற்கிறதாம் – சந்திரிகா கூறுகிறார்

சிறிலங்காவில் 26 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போரில், இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த அனைத்துலக விசாரணைகளுக்கு எதிராக, சிறிலங்கா முழுவதும் ஒன்றுபட்டு நிற்பதாக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார்.

இந்தியப் பிரதமரிடம் மன்னார் ஆயர் கையளித்த மனு

தலைமன்னார் இறங்குதுறைக்கு நேற்று வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகையினால், மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

பலாலியில் மோடிக்காக காத்திருந்த இராட்சதப் பறவை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புக் கருதியே, சிறிலங்காவில் அவரது பயணங்களுக்கு இந்திய விமானப்படையின் உலங்குவானுர்திகளும், இராட்சத விமானங்களும் பயன்படுத்தப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.