மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

போரில் இறந்த உறவுகளை நினைவுகூர தமிழருக்குத் தடையில்லை – சிறிலங்கா காவல்துறை

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டில் எந்த பகுதியிலும், தமிழர்கள் போரில் இறந்த தமது உறவுகளை நினைவு கூரலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. அது அவர்களின் உரிமை என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர்  ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

20வது திருத்தச்சட்டமூலம் குறித்து அமைச்சரவையில் இணக்கப்பாடு இல்லை

தேர்தல் முறை மாற்றம் தொடர்பான 20வது திருத்தச்சட்டம் தொடர்பாக நேற்றிரவு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இணக்கப்பாடு ஏற்படாததால், இதுதொடர்பான முடிவு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐந்து மாதங்களுக்கு கோத்தாவைக் கைது செய்ய முடியாது – உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை, வரும் ஒக்ரோபர் மாதம் வரை கைது செய்ய முடியாத நிலை புதிய அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலங்கள் முன்வைக்கப்படாது – பிரதமர் ரணில்

தற்போதைய நாடாளுமன்றத்தில் இனிமேல் எந்த புதிய சட்டமூலமும் முன்வைக்கப்படாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கோத்தாவைக் கைது செய்ய உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை கைது செய்வதற்கு, சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மே 19இல் மாத்தறையில் நடக்கிறது போர்வீரர்கள் ஞாபகார்த்த அணிவகுப்பு

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி கொள்ளப்பட்டதை நினைவு கூரும் வகையில், போர்வீரர்கள் ஞாபகார்த்த அணிவகுப்பு எதிர்வரும் 19ம் நாள் மாத்தறையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் புதன்கிழமை கலைக்கப்படுகிறது சிறிலங்கா நாடாளுமன்றம்?

சிறிலங்கா நாடாளுமன்றம் வரும் புதன்கிழமை (மே 20ம் நாள்) கலைக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐந்து நாள் பயணமாக இன்று சிறிலங்கா வருகிறார் பாகிஸ்தான் இராணுவத் தளபதி

பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் சிறிலங்காவுக்கு இன்று அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இன்று பிற்பகல் சிறிலங்கா வரும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஐந்து நாட்கள் இங்கு தங்கியிருப்பார்.

சிறிலங்காவின் பிரதி அமைச்சர் திடீர் மரணம்

சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு,மற்றும் கிறிஸ்தவ விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் நிரஞ்சன் விக்கிரமசிங்க சற்று முன்னர் திடீர் சுகவீனம் காரணமாக பாணந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமானார்.

பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் சிறிலங்காவுடன் புதிய உடன்பாடுகளில் கையெழுத்திடுகிறது ரஷ்யா

பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில், சிறிலங்காவும் ரஷ்யாவும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்ளும், புதிய உடன்பாடுகள் மற்றும் புரிந்துணர்வு உடன்பாடுகளில் கையெழுத்திடவுள்ளன.