மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

கிராம இராச்சியத்தை ஒருபோதும் கூட்டமைப்பு ஏற்காது – மாவை சேனாதிராசா

மாகாணசபைகளுக்கு இருக்கும் குறைந்தளவு அதிகாரங்களையும் பறித்தெடுக்கும் வகையில், சிறிலங்கா அரசாங்கம் முன்வைத்துள்ள, கிராம இராச்சிய திட்டத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகரில் சீனாவுக்கு காணி உரிமை வழங்கப்படாது – ரணில் வாக்குறுதி

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்துக்காக, வெளிநாட்டவர்களுக்கு காணிகள் விற்கப்படாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இறுதி வாக்கெடுப்பில் வெற்றி

சிறிலங்கா அரசாங்கத்தின் 2016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தாஜுதீன் கொலை: சிராந்தியின் சாரதியாக இருந்த கப்டன் திஸ்ஸ வெளிநாடு செல்லத் தடை

சிறிலங்காவின் ரக்பி அணி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும், குற்றப்புலனாய்வுப் பிரிவினர், கப்டன் திஸ்ஸ என்ற இராணுவப் புலனாய்வு அதிகாரியை நாட்டை விட்டு வெளியேறத் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து பிரதமர் சிறிலங்கா வருகிறார்

நியூசிலாந்துப் பிரதமர் ஜோன் கீ அடுத்த ஆண்டு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பு குறித்து சம்பிக்கவுடன் அமெரிக்கத் தூதுவர் பேச்சு

சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பை வரைவது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக, சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுடன், அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஒரு அங்குல காணி கூட சீனாவுக்கு உரிமையாக வழங்கப்படாது – சிறிலங்கா அரசு திட்டவட்டம்

சீனாவுக்கு ஒரு அங்குல காணியேனும் உரிமையாக வழங்கப்படாது என்றும், இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் உள்ளிட்ட சீனாவின் திட்டங்கள் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜதந்திரிகள் சிறிலங்காவுக்கு படையெடுப்பது ஏன்? – பீரிஸ் கேள்வி

சிறிலங்காவுக்கு படையெடுக்கும் அமெரிக்க இராஜதந்திரிகள் குறித்து, சந்தேகம் வெளியிட்டுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர், ஜி.எல்.பீரிஸ் , நாடு தற்போது அமெரிக்காவுக்கு அடிமையாகி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

வடக்கு பெண்களை தற்கொலைக் குண்டுதாரிகளாக்கியது பிரதான அரசியல் கட்சிகளே – டிலால் பெரெரா

சிறிலங்காவின் இரண்டு பிரதான கட்சிகளும் கடந்த காலங்களில் பிரிந்து நின்ற கயிறிழுத்துக் கொண்டிருந்ததால் தேசிய பிரச்சினைக்கு தீர்வை காண முடியாது போனது என்று தெரிவித்துள்ளார் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா.

பணிந்தது சிறிலங்கா அரசு – குரோதப் பேச்சு சட்டமூலத்தை விலக்கிக் கொண்டது

குரோதத்தைத் தூண்டும் வகையில் கருத்து வெளியிடுவதை தடை செய்யும், வகையில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சட்டமூலத்தை விலக்கிக் கொள்வதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.