மேலும்

சுரேஷ் சாலே இன்று மீண்டும் சிஐடியிடம் ஒப்படைக்கப்படுகிறார்

சிறிலங்கா அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம்  ஒப்படைக்கப்படவுள்ளார்.

சுரேஷ் சாலேக்கான சிகிச்சைகள் நிறைவடைந்து,  அவர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்படுவதற்குத் தகுதியுள்ளவராக இருப்பதாக  கொழும்பு தேசிய மருத்துவமனையின், 10 பேர் கொண்ட மருத்துவக் குழு, கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.

இந்த மருத்துவ மதிப்பீட்டைத் தொடர்ந்து, சுரேஷ் சாலே இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம்  மீண்டும் ஒப்படைக்கப்படுவார் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது சாலே கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான புலனாய்வுகள் தொடர்பாக, முன்னாள் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சாலே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *