மேலும்

பூட்டானில் சிறிலங்கா பிரதமருக்கு வரவேற்பு

பூட்டானைச் சென்றடைந்த சிறிலங்கா பிரதமர் ஹரினி அமரசூரியாவை பாரோ அனைத்துவலக விமான நிலையத்தில், பூட்டான் பிரதமர் செரிங் டோப்கே வரவேற்றுள்ளார்.

ஓகஸ்ட் 31 முதல் செப்ரெம்பர் 4 ஆம் நாள் வரை பூட்டானில் நடைபெறும் முதலாவது உலகளாவிய விழிப்புணர்வு உணவு அமைப்புகள் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரியா நேற்றுக்காலை கொழும்பில் இருந்து  புறப்பட்டுச் சென்றிருந்தார்.

இன்று நடைபெறும் உச்சிமாநாட்டின் தொடக்கக் கூட்டத்தில் உரையாற்றவுள்ள சிறிலங்கா பிரதமர் தனது பயணத்தின் போது பூட்டான் பிரதமருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *