மேலும்

சிறிலங்கா கடற்படைத் தளபதி இந்தியா பயணம்

சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இன்று காலை புதுடெல்லியில் சிறிலங்கா கடற்படைத் தளபதி  வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து, சவுத் புளொக்கில் சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு இந்தியக் கடற்படையினரால் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்திய கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதனும், சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர்,  புதுடெல்லியில்  இந்திய பாதுகாப்புச் செயலர் ராஜேஷ்குமார் சிங்கை சிறிலங்கா கடற்படைத் தளபதி டேமியன் பெர்னான்டோ, மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *