மேலும்

அவுஸ்ரேலியா,நியூசிலாந்துக்குப் பயணமாகிறார் விஜித ஹேரத்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நியூசிலாந்து மற்றும் அவுஸ்ரேலியாவிற்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இரு நாடுகளின் அரசாங்கங்களின் அழைப்பின் பேரில்,  அவர், எதிர்வரும்  26 முதல் ஜூன் 3 ஆம் நாள் வரை இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, ​​நியூசிலாந்தின் வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் மற்றும் அவுஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் ஆகியோருடன் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்தும்,  இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் அவர், இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவார்.

மேலும், இரு நாடுகளிலும் உள்ள மூத்த அரசாங்கப் பிரதிநிதிகள், அதிகாரிகள், வணிகத் தலைவர்கள், கல்வியாளர்கள், சிந்தனைக் குழுக்கள் மற்றும் சிறிலங்கா சமூகத்தினரையும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் சந்திக்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *