எண்ணெய் விநியோகம்- ரஷ்ய, சிறிலங்கா அரசுகளுக்கிடையில் உடன்பாடு
ஏப்ரல் மாத நடுப்பகுதியில் இருந்து எண்ணெய் விநியோகத்தைத் தொடங்குவது தொடர்பாக ரஷ்யாவுடன் அரசியல் மட்டத்திலான உடன்பாட்டை எட்டியுள்ளதாக, சிறிலங்கா போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மொஸ்கோவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனத்திடம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா- சிறிலங்கா அரசுகள் மட்டத்தில் ஏறக்குறைய அனைத்தும் செய்யப்பட்டு விட்டது என்றும், தொழில்நுட்ப மற்றும் நிதி விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
