மேலும்

பாடசாலைகளும் புதன்கிழமைகளில் மூடப்படும்

அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் புதன்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் என்று, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ அறிவித்துள்ளார்.

எரிபொருளைச் சேமிப்பதற்காக, ஒவ்வொரு புதன்கிழமையும் அரச பணியாளர்களுக்கு விடுப்பு வழங்க சிறிலங்கா  அரசாங்கம் நேற்று தீர்மானித்தது.

இந்த நடவடிக்கை பாடசாலைகளுக்கும் பொருந்தும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை,  பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதித்துறை உட்பட அனைத்து  அரச துறை பணியாளர்களுக்கும் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை, ஒவ்வொரு புதன்கிழமையும் விடுப்பு வழங்கப்படும் என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி, தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *