மேலும்

கனடிய தூதுவரை அழைத்துக் கண்டித்ததை வரவேற்கிறார் நாமல்

தமிழினப் படுகொலை நினைவுச் சின்னத்தைத் திறப்பதற்கு அனுமதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க, கனடிய தூதுவர் எரிக் வோல்ஷ் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டதற்கு, சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வரவேற்புத் தெரிவித்துள்ளார்.

அவர் எக்ஸ் தளத்தில் இட்டுள்ள பதிவில்,

“பயங்கரவாதத்தில் இருந்து நாட்டைப் பாதுகாக்க தங்கள் உயிரைத் தியாகம் செய்த படைவீரர்களைப் பாதுகாக்கும் முடிவில், சிறிலங்கா அரசாங்கம் உறுதியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

சிறிலங்கா இராணுவம் விடுதலைப் புலிகளை சட்டப்பூர்வமாக அழித்து விட்டது.

கனடா போன்ற நாடுகள் தங்கள் சொந்த அரசியல் இலாபத்திற்காக பொய்யான இனப்படுகொலை கதைகளை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று நாமல் ராஜபக்ச  குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *