மேலும்

கொழும்பு நிதி நகரத்துக்கான 28 வீத நிலப்பரப்பு கடலில் இருந்து மீட்பு

Colombo-Portsகொழும்பு நிதி நகரத்தை அமைப்பதற்காக, கடலில் இருந்து 28 வீத நிலப்பரப்பு உருவாக்கப்பட்டு விட்டதாகவும், எஞ்சிய நிலப்பரப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் உருவாக்கப்பட்டு விடும் என்றும் சீன துறைமுக பொறியியல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெருநகர அபிவிருத்தி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க நேற்று கொழும்பு துறைமுக நகர திட்டத்தை ஆய்வு செய்யச் சென்றிருந்த போது சீன அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

கடலில் இருந்து மணல் நிரப்பி கொழும்பு நிதி நகரம் உருவாக்கப்படவுள்ளது. இதற்காக, மணல் அகழும் கப்பல்கள் மூலம் கடலுக்குள் நிலப்பரப்பை உருவாக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

புதிதாக அமைக்கத் திட்டமிடப்பட்ட நிலப்பகுதியில், 28 வீதம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது. எஞ்சிய நிலப்பரப்பு, இந்த ஆண்டு இறுதிக்குள் அமைக்கப்பட்டு விடும்.

இதன் பின்னர், அடுத்த ஆண்டு கொழும்பு நிதி நகர கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படும். என்றும் சீன நிறவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *