மேலும்

மொன்டானா காவல்படை தளபதி சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளுடன் சந்திப்பு

சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள மொன்டானா தேசிய காவல்படையின் பொது அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் டிரென்டன் ஜே. கிப்சன், நேற்று சிறிலங்கா பாதுகாப்பு உயர் அதிகாரிகளைச் சந்தித்துள்ளார்.

அவர் சிறிலங்கா பாதுகாப்புப் பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர மற்றும் பாதுகாப்புச் செயலர், எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த ஆகியோரைத் தனித்தனியாக  சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்புகளின் போது, ​​சிறிலங்காவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், நீண்டகால உறவுகளை மேம்படுத்துவதற்கும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், இரு நாடுகளுக்கும் பொதுவான நலன் சார்ந்த விடயங்கள் குறித்துக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், இரு நாடுகளுக்கும் இடையிலான மேலதிக ஒத்துழைப்பிற்கான வழிகளை ஆராயவும் இந்தச் சந்திப்புகள் வாய்ப்பளித்துள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *