மேலும்

செம்மணிப் புதைகுழியில் இன்றும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 25வது நாள் அகழ்வுப் பணி இன்று இடம்பெற்றது.

இதன்போது புதிதாக 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதையடுத்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை, 360 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட சிறுவர்களுடையவை உள்ளிட்ட 10 மனித எலும்புக்கூடுகள் இன்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 351 ஆக அதிகரித்துள்ளது.

படம்- குமணன் (முகநூல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *