மேலும்

செம்மணிப் புதைகுழியில் நேற்றும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று  5 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 6 எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று  முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது,  5 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 6 எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளில் இதுவரையில் 34 எலும்புக் கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, புதைகுழிக்குள் இரண்டு இடங்களில் எலும்புக் குவியல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டவாளர் வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளில்,  275  மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 272 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *