மேலும்

பாகிஸ்தானின் நீர்மூழ்கி, போர்க்கப்பல்கள் கொழும்புக்கு அணிவகுப்பு

பாகிஸ்தான் கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் உள்ளிட்ட 3 போர்க்கப்பல்கள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளன.

பிஎன்எஸ் ஹன்கோர் என்ற நீர்மூழ்கி கப்பலும், பிஎன்எஸ் தைமூர் மற்றும் பிஎன்எஸ் அஸ்லத் ஆகிய வழிகாட்டல் ஏவுகணைப் போர்க்கப்பல்களும், நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

விநியோகத் தேவைகளை நிறைவேற்றும் நோக்கிலும், நல்லெண்ணப் பயணமாகவும் கொழும்பு வந்துள்ள இந்தக் கப்பல்களுக்கு சிறிலங்கா கடற்படை பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்துள்ளது.

இந்தப் போர்க்கப்பல்கள் கொழும்பில் தங்கியிருக்கும் போது, அவற்றின் மாலுமிகள் பல்வேறு இடங்களுக்குச் சென்று பார்வையிடவுள்ளனர்.

அத்துடன், புறப்பட்டுச் செல்லும் போது சிறிலங்காவின் மேற்கு கடற்பகுதியில் சிறிலங்கா கடற்படையுடன் பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் வழித்துணைப் பயிற்சியிலும் ஈடுபடவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *