மாகாண சபை தேர்தலுக்கு ஒதுக்கிய நிதியை திருப்பி அனுப்பிய தேர்தல்கள் ஆணைக்குழு
2025 ஆம் ஆண்டில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த 9 பில்லியன் ரூபா நிதியை, சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழு, திறைசேரிக்கு திருப்பி அனுப்பியுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2025 ஆம் ஆண்டுக்கான செயல்திறன் அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாததால், இந்த நிதி வேறு பணிகளுக்கு ஒதுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு மதிப்பீடுகளின் கீழ், தேர்தல் ஆணைக்குழுவுக்கு 21.487 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.
இதில், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்காக, 20 பில்லியன் ரூபாவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாட்டுத் தேவைகளுக்காக 1.487 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டது.
