மேலும்

பெண் மருத்துவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற வித்தியா கொலை தண்டனைக் கைதி

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த வழக்கில், மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர், பல்லேகல தும்பறை சிறைச்சாலையில் பெண் மருத்துவர் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைதிக்குச் சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர் சிறைக்குச் சென்ற போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைதியைப் பரிசோதித்துக் கொண்டிருந்த மருத்துவரை, கைதி  துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாகவும்,  ​​மருத்துவமனை பணியாளர்களும்,  சிறைக் காவலர்களும் தலையிட்டு அவரைக் காப்பாற்றியதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து பல்லேகல காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *