மேலும்

மாதம்: October 2025

ஆழ்கடலில் செயலிழந்த கப்பலின் 14 மாலுமிகளும் மீட்பு

சிறிலங்காவிற்கு தெற்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில், முக்கிய இயந்திரங்கள் செயலிழந்து தத்தளித்த  இன்டர்கிரிட்டி  ஸ்டார் ( INTEGRITY STAR) என்ற வணிகக் கப்பலின் பணியாளர்களை சிறிலங்கா கடற்படை மீட்டுள்ளது.

உள்ளூராட்சி தலைவர்களின் பாதுகாப்புக்கு காவல்துறை சிறப்புத் திட்டம்

உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களின் பாதுகாப்பிற்காக ஒரு சிறப்பு பாதுகாப்பு திட்டத்தை செயற்படுத்துவதற்கு சிறிலங்கா  காவல்துறை மா அதிபர் திட்டமிட்டுள்ளார்.

புலம்பெயரும் தொழிலாளர் எண்ணிக்கை வீழ்ச்சி

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 5சத வீதத்தினால் குறைந்துள்ளது.

சீன- சிறிலங்கா கல்வி, ஆராய்ச்சி மையத்தின் கருத்தரங்கு

சீன-சிறிலங்கா கல்வி மற்றும் ஆராய்ச்சி கூட்டு மையம் அமைக்கப்பட்டதன் 10வது ஆண்டு நிறைவு, வியாழக்கிழமை கொழும்பில் கொண்டாடப்பட்டுள்ளது.

காணாமல் போனோரின் நினைவு தினம் – அழைப்புக்கு பதிலளிக்காத சிறிலங்கா அதிபர்

சீதுவ, ரத்தொலுவவில் உள்ள காணாமல் போனோருக்கான நினைவுச்சின்னத்தில், நாளை நடைபெறவுள்ள காணாமல் போனோருக்கான 35வது ஆண்டு நினைவு தின நிகழ்வில் பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்புகளுக்கு சிறிலங்கா அதிபர் அனுர குமார திசாநாயக்க தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார்.

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை முன்கூட்டியே இடைநிறுத்தம்

வடகிழக்கு பருவமழை தொடங்கியதால், நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான, பயணிகள் கப்பல் சேவை முன்கூட்டியே இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலக துறை தலைவருடன் பிமல் ரத்நாயக்க சந்திப்பு

சீனாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலகத் துறைத் தலைவர் நீ லியு ஹெய்சிங்கைச்  (Nie Liu Heixing)  சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

10ஆவது திருகோணமலை கலந்துரையாடல் கடல்சார் கருத்தரங்கு

பத்தாவது  ‘திருகோணமலை கலந்துரையாடல் கடல்சார் கருத்தரங்கு 2025’  கடந்த  22 ஆம் திகதி ஆரம்பமாகி  இடம்பெற்றுவருகிறது.

சர்வதேசப் பொறிமுறையை எதிர்ப்பதாக ஐ.நாவிடம் முறைப்படி அறிவிப்பு

மனித உரிமை மீறல் பிரச்சினைகள் குறித்த, சிறிலங்கா தொடர்பான சர்வதேச பொறிமுறையை எதிர்ப்பதாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்திடம், அரசாங்கம் முறைப்படி அறிவித்துள்ளதாக சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

துறைமுகங்கள், விமானப் போக்குவரத்து அமைச்சர் இந்தியாவுக்கு அழைப்பு

சிறிலங்காவில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக, இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.