மேலும்

10ஆவது திருகோணமலை கலந்துரையாடல் கடல்சார் கருத்தரங்கு

பத்தாவது  ‘திருகோணமலை கலந்துரையாடல் கடல்சார் கருத்தரங்கு 2025’  கடந்த  22 ஆம் திகதி ஆரம்பமாகி  இடம்பெற்றுவருகிறது.

திருகோணமலையில் உள்ள சிறிலங்கா  கடற்படை மற்றும் கடல்சார் அகடமியின் அட்மிரல் வசந்த கரன்னகொட அரங்கில் இன்றுடன் இந்த கருத்தரங்கு நிறைவடைகிறது.

கடல்சார் அகடமியின் தளபதி கொமடோர் தினேஷ் பண்டாரவின் அழைப்பின் பேரில், கிழக்குக் கடற்படைப் பகுதித் தளபதி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இந்தியப் பெருங்கடலில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் மாற்றங்கள்: சவால்கள் மற்றும் தீர்வுகள்-  என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், கிழக்குக் கடற்படைப் பகுதியின் துணைத் தளபதி கொமடோர் புத்திக ஜெயவீர முக்கிய உரை நிகழ்த்தினார்.

வளர்ந்து வரும் கடல்சார் சவால்கள் மற்றும் வருங்கால கடற்படை உத்திகள் குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கடற்படைத் தலைமையகம் மற்றும் கிழக்குக் கடற்படைத் தலைமையகத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகள் குழுவும், சிறிலங்கா இராணுவம் மற்றும்  விமானப்படையைச் சேர்ந்த அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *