சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலக துறை தலைவருடன் பிமல் ரத்நாயக்க சந்திப்பு
சீனாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலகத் துறைத் தலைவர் நீ லியு ஹெய்சிங்கைச் (Nie Liu Heixing) சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இதன்போது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு மற்றும் அங்கு கலந்துரையாடப்பட்ட பிரச்சினைகள் குறித்தும், தற்போதைய முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
புதிய சீனா நிறுவப்பட்ட பின்னர், நிலையான நாட்டைக் கட்டியெழுப்புவதில் சீன கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட உறுதிப்பாடு மற்றும் பணியக விவகாரங்களில் பொதுமக்களின் நம்பிக்கையை வெல்வதன் மூலம், நிலையான நிர்வாகத்தைப் பேணுதல், முற்போக்கான எதிர் சீர்திருத்தம், ஊழல் எதிர்ப்புக் கொள்கை மற்றும் கட்சியின் வளர்ச்சி, ஒழுக்கத்தைப் பேணுவதன் அவசியம் குறித்தும் இதன்போது விரிவாகப் பேசப்பட்டுள்ளது.
சமூக நலன், சமூகப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலகத் துறைத் தலைவர் நீ லியு ஹெய்சிங்கைச் வலியுறுத்தியுள்ளார்.
ஜேவிபிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்பாட்டை செயற்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
