கோட்டா, சமன் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைப்பு
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அரகலய போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலைக் கட்டுப்படுத்தத் தவறியது தொடர்பாக, முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் அளித்த வாக்குமூலம் குறித்து விசாரிக்க கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், முன்னாள் ரணில் விக்கிரமசிங்கவின் பிரித்தானிய பயணத்திற்காக அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு குறித்து வாக்குமூலம் அளிக்க சமன் ஏக்கநாயக்க நாளை குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டுள்ளது.
சமன் ஏக்கநாயக்கவிடமிருந்து மேலும் ஒரு வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளது.
வூல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம் முன்னாள் அதிபருக்கு அனுப்பிய அழைப்பிதழ் என விவரிக்கப்பட்டுள்ள விடயம், குறித்து சமன் ஏக்கநாயக்கவிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
