செம்மணி ஆய்வுக்கு சர்வதேச தொழில்நுட்ப உதவி தேவை
யாழ்ப்பாணம்- செம்மணிப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளை ஆய்வு செய்வதற்கு, சர்வதேச தொழில்நுட்ப உதவி தேவை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முலாஃபர்,
செம்மணியில் மீட்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகளை ஆய்வு செய்வதற்கு சர்வதேச தொழில்நுட்ப உதவியை நாட வேண்டிய அவசியம் உள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு தற்போது இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி வருகிறது.
இருப்பினும், எந்த நாட்டிடமும், நாங்கள் அவ்வாறான உதவி எதையும் இதுவரை கோரவில்லை.“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை சில வாரங்களுக்கு முன்னர் இதுபற்றிக் கருத்து வெளியிட்டிருந்த தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முலாஃபர்,
புதைகுழிகளில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளை ஆய்வு செய்வதற்கு சர்வதேச நிபுணர்களிடமிருந்து தொழில்நுட்ப உதவியைப் பெற வேண்டியிருக்கலாம் என்றாலும், விசாரணை செயல்முறைகளை அரசாங்கம் முழுமையாக ஆதரிக்கும் என்பதால், வேறு எந்த வகையான சர்வதேச தலையீடும் தேவையில்லை என்று கூறியிருந்தார்.
