மேலும்

காவல்துறை மா அதிபர் பதவிக்கு பிரியந்த வீரசூரியவின் பெயர் பரிந்துரை

சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பதவிக்கு, பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவினால் அரசியலமைப்பு பேரவைக்கு இதுதொடர்பான முன்மொழிவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட, தேசபந்து தென்னகோனை காவல்துறை மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானத்திற்கு சிறிலங்கா அதிபர், அனுமதி அளித்திருந்தார்.

இதையடுத்தே புதிய காவல்துறை மா அதிபர் பதவிக்கு பிரியந்த வீரசூரியவின் பெயரை அவர் முன்மொழிந்துள்ளார்.

இந்த பரிந்துரையை அரசியலமைப்பு பேரவை உறுதி செய்ய வேண்டும்.

நேற்று பிற்பகல் அரசியலமைப்பு பேரவை, சபாநாயகர் தலைமையில் கூடிய போதும் இந்தப் பரிந்துரை குறித்து அதில் ஆலோசிக்கப்படவில்லை.

அரசியலமைப்பு பேரவையின் அடுத்த கூட்டம் வரும் 13ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், புதிய காவல்துறை மா அதிபர் நியமனம் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *