நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கையெழுத்து திரட்டும் பணி ஆரம்பம்
சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு வருகின்றனர்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர மீது ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை பதவியில் வைத்துக் கொண்டு அதுபற்றி முறையான விசாரணைகளை மேற்கொள்வது கடினம் என்பதால், அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன.
இதற்கமைய இந்த நம்பிக்கையல்லா பிரேரணையில், எதிர்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துகள் பெறப்பட்டு வருகிறது.
இந்தப் பிரேரணை எதிர்வரும் திங்கட்கிழமை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளது.