என்பிபியின் வங்கிக்கணக்கில் ஊதியம்- சட்ட நடவடிக்கை எடுக்க திட்டம்
தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த ஊதியம், கட்சியின் அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்கில், வைப்பிலிடப்படுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக, சட்டவாளர் ஷிரால் லக்திலக தெரிவித்துள்ளார்.
159 தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களினதும், மாதாந்த ஊதியமான 47.7 மில்லியன் ரூபா, பெலவத்தவில் உள்ள கட்சி அலுவலகத்தின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படுகிறது.
இதன்மூலம், ஆண்டுக்கு, 572.4 மில்லியன் ரூபா கட்சியின் கணக்கில் வைப்பிலிடப்படும்.
வரி செலுத்துவோரின் நிதியான, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம், ஒரு கட்சியின் கணக்கில் வைப்பிலிடப்படுவது தவறு.
நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை மட்டுமே கணக்கிட்டுள்ளோம்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு மாத ஊதியம் மற்றம் கொடுப்பனவுகள், சுமார் 300,000 ரூபாவாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மட்டுமல்ல, பிரதேச சபை உறுப்பினர்களுக்கான கொடுப்பனவும், இந்தக் கணக்கிலேயே வைப்பிலிடப்படுகிறது.
இதற்கு சட்டப்பூர்வ தீர்வை நாட நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அவர்கள் அதை இந்த முறையில் நிதியாக மாற்றும்போது வருமான வரி பெறப்படுவதில்லை என்றும், அரசாங்கம் மக்களை ஏமாற்றுகிறது என்றும், சட்டவாளர் ஷிரால் லக்திலக தெரிவித்துள்ளார்.