செம்மணியில் இனங்காணப்பட்ட எலும்புக்கூடுகள் 115 ஆக உயர்வு
யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை, 115 ஆக அதிகரித்துள்ளது.
இரண்டாம் கட்ட அகழ்வின் 25ஆவது நாளான இன்று, மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது, 4 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதை அடுத்தே, இனங்காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது.
அதேவேளை,இன்று மேலும் 3 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது.