சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு ஓராண்டு சேவை நீடிப்பு
சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் லசந்த ரொட்றிகோவின் பதவிக்காலம் ஓராண்டு நீடிக்கப்பட்டுள்ளது.
அவரது பதவிக்காலத்தை, 2025 ஓகஸ்ட் 1ஆம் திகதி தொடக்கம் ஓராண்டிற்கு நீடித்து, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
ஆட்டிலறி படைப்பிரிவைச் சேர்ந்த லெப்.ஜெனரல் லசந்த ரொட்றிகோ, சிறிலங்கா இராணுவத்தின் 25ஆவது தளபதியாக, 2024 டிசெம்பர் 31ஆம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்றிருந்தார்.
அவர் பணி ஓய்வு வயதை எட்டுகின்ற நிலையிலேயே ஓராண்டு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.