பாதிக்கும் கீழாக குறைந்த தொழிலாளர் பங்களிப்பு வீதம்
சிறிலங்காவில் உழைக்கும் வயதுள்ள மக்களில், பாதிக்கும் குறைவானவர்களே வேலை செய்கிறார்கள் அல்லது தீவிரமாக வேலை தேடுகிறார்கள் என்று சிறிலங்கா மத்திய வங்கியின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், நாட்டின் தொழிலாளர் பங்களிப்பு வீதம் (LFPR) 49.7 சதவீதமாக இருந்தது .
அதாவது, 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில், இரண்டில் ஒருவருக்கும் குறைவானவர்களே வேலை செய்கிறார்கள் அல்லது வேலை தேட முயற்சிக்கிறார்கள் என்பதே இதன் அர்த்தமாகும்.
தொடர்ச்சியாக 11வது காலாண்டாக 50 சதவீதத்திற்கும் குறைவான இந்த நிலை நீடிக்கிறது.
இது போரின் போதும் அதற்குப் பிறகும் காணப்பட்ட ஒரு கவலைக்குரிய போக்காக இருந்தது.
அப்போது, சிறிலங்கா உறுதியற்ற நிலையை எதிர்கொண்டதுடன்ஈ, பலர் இடப்பெயர்வு, மோதல் மற்றும் பயம் காரணமாக வேலை செய்ய முடியவில்லை அல்லது விரும்பவில்லை.
இப்போதும் இதே மட்டங்களில் வேலைப்படையின் பங்களிப்பு இருப்பது தற்போதைய பொருளாதார நெருக்கடி எவ்வளவு கடுமையானதாக மாறியுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
அண்மைய ஆண்டுகளில் அதிகபட்ச தொழிலாளர் பங்களிப்பு, 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், நல்லாட்சி அரசாங்கத்தின் போது 54.7 சதவீதமாக காணப்பட்டது.
