மேலும்

பொய் தகவல்களை பெற்ற 66 வீதமான சிங்கள செய்தி நுகர்வோர்

சிறிலங்காவில் 66 சதவீதமான சிங்கள செய்தி நுகர்வோர்,  அண்மையில் பொய்யான அல்லது தவறாக வழிநடத்தும் தகவல்களை எதிர்கொண்டதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

LIRNEasia என்ற பிராந்திய கொள்கை சிந்தனைக் குழாமினால், அண்மையில்  தேசிய அளவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது.

சிறிலங்காவில், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 80% க்கும் மேற்பட்ட சிங்கள செய்தி நுகர்வோர், மற்றவர்களுடன் தீவிரமாக செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது.

ஆய்வில் பதிலளித்தவர்களில் 66% பேர் அண்மைக் காலங்களில் பொய்யான அல்லது தவறாக வழிநடத்தும் தகவல்களை எதிர்கொண்டதாகக் கூறினர்.

பொய்யா அல்லது தவறாக வழிநடத்தும் தகவல்களைப் பெற்றவர்களில், 56% பேர் கடந்த காலங்களில் தவறான தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக ஒப்புக்கொண்டனர்.

அவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் செய்தி தவறானது என்று மற்றவர்களுக்குத் தெரிவிக்க வேண்டுமென்றே, அவ்வாறு செய்ததாகக் கூறுகின்றனர்.

நாடு முழுவதும் சீரற்ற முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,700 க்கும் மேற்பட்ட சிங்கள செய்தி நுகர்வோரிடமிருந்து பதில்களைச் சேகரித்த இந்த கணக்கெடுப்பு, தவறான தகவல் பரவுவது குறித்த வளர்ந்து வரும் விழிப்புணர்வையும் கவலையையும் எடுத்துக்காட்டுகிறது.

பதிலளித்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் பகிர்வதற்கு முன்பு தகவல்களைச் சரிபார்ப்பதாகக் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *