மேலும்

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்துக்கு வந்த முதல் பயணி

சிறிலங்காவின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையமான – யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் கடந்த 17ஆம் நாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.

இதையடுத்து, அன்று காலை 10.14 மணியளவில் யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில், சென்னையில் இருந்து வந்த எயர் இந்தியாவின் துணை நிறுவனமான அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் ATR 72 – 600 விமானம் முதன் முதலாக தரையிறங்கியது.

இந்த விமானத்தில், எயர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அஷ்வனி லொஹானி உள்ளிட்ட விருந்தினர்கள் பலரும் யாழ்ப்பாணம் வந்தனர்.

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் திறந்து வைக்கப்பட்ட பின்னர், வெளிநாட்டில் இருந்து வந்த முதலாவது பயணியாக, எயர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அஷ்வனி லொஹானி குடிவரவு அதிகாரிகளிடம் தனது கடவுச்சீட்டை கொடுத்து பதிவு செய்து கொண்டார்.

அத்துடன் அவரே பலாலி விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகளின் சோதனையையும் முதலாவதாக எதிர்கொண்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *