மேலும்

எகிறும் அதிபர் தேர்தல் செலவு

பிளாஸ்டிக் வாக்குப்பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கு ஆராய்ந்து வருவதால், அதிபர் தேர்தலுக்கான செலவினம் மேலும் அதிகரிக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிபர் தேர்தலுக்கான மொத்த செலவினங்களை தேர்தல் ஆணைக்குழு இன்னும் இறுதி செய்யவில்லை என்று, தேர்தல் ஆணையாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

அதிபர் தேர்தலுக்கான மொத்த செலவினம், சுமார் 4 தொடக்கம் 4.5 பில்லியன் ரூபா வரை இருக்கும் என்று ஆணைக்குழு ஆரம்ப மதிப்பீடுகளை செய்திருந்தது.

எனினும், தற்போது, தேர்தல் ஆணைக்குழு 7 பில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு திறைசேரியிடம் கோரியுள்ளது.

35 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் தேர்தலுக்கான செலவு அதிகரிக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

பிளாஸ்டிக் வாக்குப் பெட்டிகளுக்கு செல்ல வேண்டுமா, வேண்டாமா என்று ஆணைக்குழு இன்னும் முடிவு செய்யவில்லை, பிளாஸ்டிக் வாக்குப் பெட்டிகளுக்கு செல்ல முடிவு செய்தால், தேர்தலுக்கான செலவு மேலும் அதிகரிக்கும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கான மொத்த செலவு இன்னும் கணக்கிடப்படவில்லை என்றும், அரசு அச்சக திணைக்கள தலைவர் கங்கானி லியனகே கூறினார்.

காகித செலவு அதிகரித்துள்ளது. அச்சிடும் நேரம் அதிகரிக்கும். இதன் விளைவாக செலவும் அதிகரிக்கும் என்றும்,  எனினும், நொவம்பர் 6 ஆம் நாளுக்குள் வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணியை முடிக்க திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *