மேலும்

மதவாச்சியில் நள்ளிரவு விபத்து – யாழ். சென்ற மூவர் பலி

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சிற்றுந்துடன், பாரஊர்தி ஒன்று பக்கவாட்டில் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.

அனுராதபுர மாவட்டத்தில் உள்ள மதவாச்சி , வஹமலுகெல்லேவே பகுதியில் நேற்று நள்ளிரவு 11.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.

இதில், சிற்றுந்தில் பயணம் செய்த 8 பயணிகள் படுகாயமடைந்த நிலையில் மதவாச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் மூவர் உயிரிழந்தனர்.

உயிரிழந்த மூவரும், நல்லூரைச் சேர்ந்தவர்கள் என்றும், 12, 30 மற்றும் 53 வயதுடையவர்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படுகாயமடைந்த ஏனைய 5 பேரும், மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுர மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *