புதுடெல்லிக்குப் பறக்கிறார் கோத்தா
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச விரைவில் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார், என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகப் போட்டியிட கோத்தாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளார்.
வரும் ஓகஸ்ட் 11ஆம் நாள் கோத்தாபய ராஜபக்ச வேட்பாளராக அதிகாரபூர்வமாக, மகிந்த ராஜபக்சவினால் அறிவிக்கப்படவுள்ளார்.
அதற்கு முன்னதாக புதுடெல்லிக்குச் சென்று இந்திய அதிகார மட்டங்களைச் சந்திக்க கோத்தாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.