மேலும்

ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பு – மோடியின் சிறிலங்கா பயணத்தில் முக்கிய கவனம்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான, இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து கூடுதல் கவனம் செலுத்துவார் என்று புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்ற பின்னர், நரேந்திர மோடி நாளை, முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை, மாலைதீவுக்கு மேற்கொள்ளவுள்ளார்.

அங்கிருந்து நாடு திரும்பும் வழியில், நாளை மறுநாள் சிறிலங்கா வரவுள்ள, இந்தியப் பிரதமர், சிறிலங்கா அதிபர் மற்றும் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

இதன்போதே, ஏனைய விவகாரங்களுடன், ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான இருதரப்பு ஒத்துழைப்பு விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயங்கரவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் கூட்டு அச்சுறுத்தலாக பார்க்கும் நாடு என்ற வகையில், சிறிலங்காவின் கோரிக்கை விடுத்தால், இந்த பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு, இந்தியா, சாத்தியமான எல்லா உதவிகளையும் வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

பிராந்திய பாதுகாப்பு மற்றும் உலகளாவிய சமாதானத்திற்கான அச்சுறுத்தல் என்பதால், ஜிகாதி சித்தாந்தம், தனிமைப்படுத்தப்பட்டு, இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா கருதுவதாகவும், அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *