மேலும்

மைத்திரி மகனின் திருமணத்தில் அலைபேசிகளுக்குத் தடை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேனவின் திருமண நிகழ்வில் பங்கேற்றவர்கள், அலைபேசிகளை வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேனவுக்கும், சிறிலங்காவின் பிரபல தொழிலதிபர் அதுல வீரரத்னவின் மகள் நிபுணிக்கும், கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு ஹில்டன் விடுதியில் திருமணம் இடம்பெற்றது.

முன்னதாக ஷங்ரி-லா விடுதியிலேயே நடக்கவிருந்த இந்த திருமணம், அங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை அடுத்து. ஹில்டன் விடுதிக்கு மாற்றப்பட்டிருந்தது.

இந்த திருமண நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர். அரசியல்வாதிகள் எவரும் அழைக்கப்படவில்லை.

திருமணத்துக்கு வந்திருந்தவர்களிடம் இருந்து, விடுதியின் மண்டபத்துக்குள் நுழைய முன்னரே, அலைபேசிகளை ஒப்படைத்து விட்டு செல்லுமாறு கேட்கப்பட்டனர்.

இதன் காரணமாக திருமணம் தொடர்பான எந்தவொரு படங்களும் சமூக ஊடகங்களிலோ, ஊடகங்களிலோ வெளியாகவில்லை. படங்கள் வெளியாவதை தடுப்பதற்காகவே, இவ்வாறு  அலைபேசிகள் திருமண மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அதேவேளை திருமணத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான சிறிலங்கா படையினர் ஹில்டன் விடுதியைச் சுற்றி பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.

சாதாரண உடையிலும் ஏராளமான படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *