சிறிலங்கா குண்டுவெடிப்புகள் – அவசரமாக கூடும் தேசிய பாதுகாப்புச்சபை
சிறிலங்காவில் ஆறு இடங்களில் அடுத்தடுத்த நிகழ்ந்த குண்டு வெடிப்புகளை அடுத்து தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டம் அவசரமாக கூட்டப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் ஆறு இடங்களில் அடுத்தடுத்த நிகழ்ந்த குண்டு வெடிப்புகளை அடுத்து தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டம் அவசரமாக கூட்டப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
கொழும்பு- கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலய வளாகத்தில் 26 பேரின் சடலங்கள் கிடப்பதாக சிறிலங்கா காவல்துறையினரை மேற்கொள்காட்டி, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் சுமார் 129 வரையானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் மற்றும் ஆடம்பர விடுதிகளில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்ட 24 பேரின் சடலங்கள், கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
சிறிலங்காவில் இன்று காலை மூன்று தேவாலயங்களிலும், மூன்று ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் நிகழ்ந்த ஆறு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பில் உள்ள தேவாலயம் ஒன்றிலும் இன்று காலை குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு – நகரில் உள்ள பிரபலமான மூன்று, ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் இன்று காலை குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு- கொட்டாஞ்சேனையில் உள்ள கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திலும், நீர்கொழும்பு – கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்திலும் இன்று காலை ஒரே நேரத்தில் குண்டுகள் வெடித்ததில் பலர் கொல்லப்பட்டனர். 50 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வாங்குவதற்காக மில்லியன் கணக்கான டொலர் நிதி சேகரித்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட 13 பேர் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், சுவிஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, சுவிஸ் சட்டமா அதிபர் முறையீடு செய்துள்ளார்.