மேலும்

கொழும்பு தேசிய மருத்துவமனையில் 24 பேரின் சடலங்கள்

கொழும்பில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் மற்றும் ஆடம்பர விடுதிகளில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்ட 24 பேரின் சடலங்கள், கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவங்களில் காயமடைந்த 280 பேருக்கு மேல் கொழும்பு தேசிய மருத்துவமனை, களுபோவில மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே குண்டுவெடிப்பு நிகழ்ந்த கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது சென்றுள்ளார்.

குண்டுவெடிப்பு நடந்த இடங்களிலோ, மருத்துவமனைகளிலோ பொதுமக்களை ஒன்று கூடாமல் அமைதியாக இருக்கும்படி சிறிலங்கா காவல்துறை கோரியுள்ளது.

குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து, கட்டுநாயக்க  விமான நிலையம் உள்ளிட்ட கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் மக்கள் அதிகளவில் கூடுகின்ற இடங்களின் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *