மேலும்

சிறிலங்கா இராணுவத் தளபதியுடன் அவுஸ்ரேலிய கடற்படை உயர்நிலைத் தளபதி பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய கடற்படையின் கூட்டு நடவடிக்கை பிரதி தளபதி மேஜர் ஜெனரல் றோஜர் நோபிள், சிறிலங்கா இராணுவத் தளபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

Indo-Pacific Endeavour – 2019 கூட்டுப் பயிற்சிக்காக கொழும்பு வந்துள்ள, அவுஸ்ரேலிய கடற்படையின் HMAS Canberra வுடன், சிறிலங்கா வந்துள்ள, மேஜர் ஜெனரல் றோஜர் நோபிள், நேற்று முன்தினம் சிறிலங்கா இராணுவத் தலைமையகத்துக்குச் சென்றார்.

அங்கு சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன்போது, அவுஸ்ரேலிய பாதுகாப்பு படைகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்தும், இந்திய பெருங்கடலின் பாதுகாப்பு நலன்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் அவுஸ்ரேலிய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் சியான் உன்வின் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *