மேலும்

திருகோணமலையில் இருந்து புறப்பட்டன அவுஸ்ரேலிய போர்க்கப்பல்கள்

IF

திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நின்ற அவுஸ்ரேலிய கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்களும் தமது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியுள்ளன.

Indo-Pacific Endeavour 2019 கூட்டுப் பயிற்சியின் ஒரு கட்டமாக அவுஸ்ரேலிய கடற்படையின் HMAS ‘Success’ மற்றும் HMAS ‘Parramatta’ ஆகிய போர்க்கப்பல்கள், திருகோணமலை துறைமுகத்துக்கு வந்திருந்தன.

இந்தப் போர்க்கப்பல்களில் இருந்த அவுஸ்ரேலிய கடற்படையில் சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து பல்வேறு கூட்டுப் பயிற்சிகளிலும் ஈடுபட்டனர்.

அவுஸ்ரேலிய கடற்படை சுழியோடிகள் கடந்த 24ஆம் நாள், கிழக்கு கடற்படையின் சுழியோடும் பிரிவின் கட்டளைப் பணியகத்துக்குச் சென்றதுடன், துறைமுகப் பகுதியில் சுழியோடும் பயிற்சிகளையும் மேற்கொண்டனர்.

அத்துடன் சிறிலங்கா கடற்படையின் சிந்துரால மற்றும் சக்தி ஆகிய போர்க்கப்பல்களுடன் இணைந்து அவுஸ்ரேலிய போர்க்கப்பல்கள் கூட்டுப் பயிற்சிகளிலும் ஈடுபட்டன.

இதன் பின்னர் கடந்த 27ஆம் நாள் அவுஸ்ரேலிய போர்க்கப்பல்கள் இரண்டும் திருகோணமலையில் இருந்து புறப்பட்டுச் சென்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *