மேலும்

இந்தியாவும் பாகிஸ்தானும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் – சிறிலங்கா கோரிக்கை

தெற்காசியப் பிராந்தியத்தின் பாதுகாப்பு, அமைதி மற்றும் உறுதிப்பாட்டைப் பேறுவதில் இந்தியாவும் பாகிஸ்தானும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் தோன்றியுள்ள பதற்ற நிலையை அடுத்து. சிறிலங்கா வெளிவிவாகர அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புல்வாமாவில் இந்தியாவின் துணை ஆயுதப்படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்துள்ள சிறிலங்கா அரசாங்கம்,  எல்லா வடிவத்திலுமான தீவிரவாதத்தை எதிர்ப்பதில் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தெற்காசியாவில்,  பதற்றத்தைத் தணித்து, இருதரப்பு பிரச்சினைகளுக்கு கலந்துரையாடமல் மூலம் தீர்வு காண்பதற்கும், அமைதி மற்றும் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கும் சிறிலங்கா பலமான ஆதரவைத் தெரிவித்துள்ளது.

3 கருத்துகள் “இந்தியாவும் பாகிஸ்தானும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் – சிறிலங்கா கோரிக்கை”

 1. Esan Seelan
  Esan Seelan says:

  நீங்கள் எப்படி நடந்து கொண்டீர்கள்?

 2. Esan Seelan
  Esan Seelan says:

  https://m.facebook.com/story.php?story_fbid=335414307078995&id=100018312844062

  இதற்கு என்ன பதில் ஸ்ரீலங்கா அரசிடம் உண்டு

 3. Esan Seelan
  Esan Seelan says:

  காஸ்மீர் மக்களை நிம்மதியாக வாழ விட்டால் யாருக்கும் பிரச்சனையில்லை .அல்லது மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கல் காஸ் மீரிலும் உருவாகும்

  https://m.facebook.com/story.php?story_fbid=2406154036084566&id=100000699809148

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *