பெங்களூரு சென்றார் மகிந்த
இரண்டு நாட்கள் பயணம் ஒன்றை மேற்கொண்டு, சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்குப் பயணமாகியுள்ளார்.
தி ஹிந்து குழுமத்தினால், பெங்களூரு நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றவே மகிந்த ராஜபக்ச அங்கு சென்றுள்ளார்.
இன்று ஆரம்பமாகி நாளை வரை நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கில், மகிந்த ராஜபக்ச, இந்திய- சிறிலங்கா உறவுகளின் எதிர்காலம் என்ற தலைப்பில் இன்று உரையாற்றவுள்ளார்.
மகிந்த ராஜபக்சவுடன், நாமல் ராஜபக்ச, லொகான் ரத்வத்த, டிலான் பெரேரா, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட பலரும் பெங்களூரு சென்றுள்ளனர்.